பல்லாண்டு வாழியவே! பாரினில் உயர்ந்திடவே எங்களின் சம்பூர் மகா வித்தியாலயம் என்றும் வாழிய வாழியவே வளமுற வாழியவே.
திரு சேர் நிறை பதமும் தேவியர் இரு நிதியும் பெருகும் துணிவு அன்பும் பெரியோர் ஆசிகளும் பெறவே வாழிய வாழியவே வளமுற வாழியவே.
(பல்லாண்டு
கன்னித் தமிழுடனே கவினுறும் கலை மணிகள் கணிதம் விஞ்ஞானம் புவியியல் தமிழேடு கற்கும் சிறுவர் இனம்.
(பல்லாண்டு )
அன்போடு பண்புகளை அள்ளிச் சொரிகின்ற அதிபர் ஆசிரியர்கள் கண்ணின் மணிகள் எனக் கற்று வளர்ப்போம் இதை நாமும்.
(பல்லாண்டு)